உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதை இடைநிறுத்தி நீதிமன்றின் அதிரடி உத்தரவு

சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பெற்றோர்கள் சிலரினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

Related posts

இன்று புதிய அமைச்சரவை நியமனம்

அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அழகியவன்ன

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்