உள்நாடுபிராந்தியம்

தம்புள்ளையில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போ​ஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

editor

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை