வகைப்படுத்தப்படாத

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படுகிறது – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – தமிழ் முற்போக்கு கூட்டணியை கட்சியாக பதிவு செய்வதற்கான ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (28.02.2017) ராஜகிரியவில்  அமைந்துள்ள தலைமை தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், பிரதித்தலைவர் பழனி திகாம்பரம், நிதிச் செயலாளர் எம்.திலகராஜா, செயலாளர் லோரன்ஸ், மற்றும் கூட்டணியின் பிரதிப்பொதுச்செயலாளர் சண். பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியை பதிவு செய்யும் இந்நிகழ்வில் ஆவணங்கள் கைளிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் கூட்டணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/unnamed-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/unnamed-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/unnamed-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/unnamed-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/unnamed-6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/03/unnamed-5.jpg”]

 

Related posts

STF ஐ நீக்க நடவடிக்கை!

ස්ටර්ලින් පවුමේ අගය පහළට

Navy apprehends 4 persons with Kerala cannabis in Southern seas [VIDEO]