அம்பாறை மாவட்ட பாலமுனை மரூன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மரூன்ஸ் சாம்பியன் கோப்பை – 2025 மாபெரும் இறுதிப் போட்டியில் என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கு மேலதிகமாக இருந்தும் என்னை அழைத்திருந்தார்கள்.
இதனை இட்டு தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான என்னை அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் எம்முள் எவ்வளவு பிரச்சனைகள் இருப்பினும் மொழியால் ஒன்றுபட்டு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள எமது பிரதேசங்களை ஆளவேண்டும். அதே நேரத்தில் தேசிய மக்கள் அரசாங்கத்தின் தமிழ் பேசும் மக்களின் தனித்துவத்தை அழிக்கும் நிகழ்ச்சி நிகழ்களில் இருந்து எம்மை பாதுகாக்க ஒர் அணியாக ஒன்றிணைத்து முறியடிக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளாக காணப்படும் நாம் கட்சிகளாக பிரிந்து காணப்படுகின்றோம். ஆனால் முஸ்லீம் மக்கள் ஊர் அடிப்படையில் கல்முனை, சம்மாந்துறை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி என்று பிரிந்து காணப்படுகின்றார்கள்.
நாம் அனைவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர்ந்து இவ் அரசின் தமிழ் பேசும் இனங்களின் தனித்துவத்தை அழிக்கும் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.
