உள்நாடு

தமிழரசு கட்சியின் புதிய தலைவர் யார் ? தெரிவு இன்று

(UTV | கொழும்பு) –

தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை இடம்பெறவுள்ளது.குறித்த வாக்கெடுப்பில், இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 340 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், இன்று இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பின் முடிகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார் என இலங்கை தமிழரசு கட்சி செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கல்முனையில் சின்னமுத்து நோய்ப் பரவலை தடுப்பதற்காக விசேட கலந்துரையாடல்.

2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94% ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்

editor

ஒக்டோபர் முதல் வாரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!