உலகம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட தலைச்சுற்று காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கையின் படி,நேற்று ( 21) காலை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது ஸ்டாலினுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலைச்சுற்று ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மனித கடத்தல் விசாரணை – நாடு திரும்பிய இந்தியர்கள்.

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

editor

கொரோனா காரணமாக 70,000 கைதிகள் விடுவிப்பு