உள்நாடுசூடான செய்திகள் 1

தப்லீக் பணியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 08 இந்தோனேஷியர்களும் விடுதலை

-எமது செய்தியாளர்

இலங்கையில் தப்லீக் பணி­க­ளுக்­காக (பிர­சாரம்) கடந்த 03ஆம் திகதி இலங்கை வந்த 08 இந்­தோ­னே­ஷி­யர்களை நுவரெலிய பொலிஸாரினால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவர்களை இன்று (16) நுவரெலிய மாவட்ட நீதிமன்றம் வழங்கிலியிருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்துள்ளது,

இது தொடர்பில் மேலும் தெரிய்வருவதாவது, 8 வெளி­நாட்­ட­வர்கள் கொண்ட குழு நுவ­ரெ­லியா அல் கபீர் ஜும் ஆ பள்­ளி­வா­சலில் தங்கி இருப்­பதும் அவர்கள் 2024 நவம்பர் 29 ஆம் திகதி நுவ­ரெ­லியா பொலிஸ் வலய அதி­கார எல்­லைக்குள் வந்­தி­ருப்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது.

முதலில் அவர்கள் ஹாவ எலிய மஸ்ஜித் ராசித் பள்­ளி­வா­ச­லுக்கு வந்துள்­ளதும் அங்­கி­ருந்தே நுவ­ரெ­லியா அல் கபீர் ஜும் ஆ பள்­ளி­வா­ச­லுக்கு வந்­த­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் நிஷாந்த குழு­வினர் முன்­னெ­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய வந்திருந்தது.

அதன்­படி இந்த 8 பேரும் இந்­தோ­னே­ஷி­யர்கள் என பொலிஸார் கண்­ட­றிந்­த­தாக பொலிஸ் தரப்பில் கூறப்­ப­டு­கின்­றது.

இந்த நிலையில் இவர்­க­ளுக்கு பொறுப்­பா­ள­ராக நுவ­ரெ­லி­யாவை சேர்ந்த மொஹம்மட் பளீல் தீன் என்­பவர் இருந்­த­தா­கவும், முதலில் அவ­ரது வாக்கு மூலத்தை பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரண­துங்க ஊடாக பதிவு செய்­த­தா­கவும் பொலிஸார் கூறு­கின்­றனர்.

இதன்­போது இவ­ருக்கு இந்­தோ­னே­ஷிய பிர­ஜைகள் பயன்­ப­டுத்தும் மொழி தொடர்பில் பரந்த அறிவு காணப்­ப­டு­வ­தாக தெரி­ய­வந்­த­தாக கூறும் பொலிஸார், அவரின் உத­வி­யோடு 8 இந்­தோ­னே­ஷிய பிர­ஜை­களின் வாக்கு மூலங்கள் பின்னர் பதிவு செய்­யப்­பட்­ட­தாக தெரி­வித்­தனர்.

இதன்­போது முதலில் இலங்­கையில் தங்­கி­யி­ருக்க அவர்­க­ளிடம் செல்­லு­ப­டி­யான வீசா இருக்­கின்­றதா என பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரண­துங்க வின­வி­ய­தா­கவும் இதன்­போது எவரும் செல்­லு­ப­டி­யான வீசாவை பொலி­ஸா­ரிடம் சமர்ப்­பிக்க தவ­றி­ய­தா­கவும், இதனை தொடர்ந்து அவர்­க­ளது கடவுச் சீட்­டுக்­களை கோரிய போது அவற்­றையும் முன் வைக்க அவர்கள் தவ­றி­ய­தா­கவும் பொலிஸார் நீதி­மன்­றுக்கு சமர்ப்­பித்த முதல் தகவல் அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.

இன்றைய வழக்கின் போது, இந்­தோ­னே­ஷி­ய ஜமாத் ஜமாத் தரப்பினரினால் தவறுகள் அல்லது சட்டவிரோதமான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனக்கூறி அவர்களை நீதிமன்றம் விட்வித்துள்ளது

Related posts

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்