உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

(UTV | கொழும்பு) –  தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட தினங்களில் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்குச் சீட்டுகள் இன்று (21) மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தபால் நிலையத்தில் கையளிக்கப்படவிருந்த போதிலும், அதற்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளை இம்மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

ஆனால், நேற்று (20) மாலை வரை, தபால் வாக்கு சீட்டுகளை தேர்தல் கமிஷனிடம், அரசு அச்சக அலுவலகம் வழங்கவில்லை.
17 மாவட்டங்கள் தொடர்பான தபால் ஓட்டுகளை அச்சடிக்கும் பணியை அரசு அச்சகம் நிறைவு செய்துள்ளது.

இந்நிலைமையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் பிற்போடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்ராமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

போதகர் ஜெயராமுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

சேதனப் பசளை தயாரிக்கும் விவசாயிகளுக்கு கொடுப்பனவு