சூடான செய்திகள் 1

தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் மூலம் தரவுகளை திருட முற்பட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) – கடந்த 12ஆம் திகதி பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்தின் (ATM) மூலம் பண அட்டை (Debit/ Credit Card) தரவுகளை திருட முற்பட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் நால்வர் நேற்று (16) மாலை மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரமுல்ல, மிரிஸ்ஸ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரத்திலிருந்தே குறித்த சந்தேகநபர்கள் இவ்வாறு தரவுகளை திருட முற்பட்டுள்ளனர்.

ஏ.ரி.எம். இயந்திரம் அமைந்துள்ள கூடத்திற்குள் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் நுழைந்து, ஏ.ரி.எம் இல் தரவுகளை திருடும் நோக்கத்திற்காக இலத்திரனியல் சாதனங்களை பொருத்தியதாக கொட்டவில பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நால்வரையும், இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி

நான்காயிரம் சிங்கள பெளத்த தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதா?

ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயம்