உள்நாடுபிராந்தியம்

தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – இருவர் பலி

மீரிகம – பஸ்யால பிரதான வீதியில் மல்லேஹெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட அமிதிரிகல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வீடியோ | தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகளை இணைத்துக் கொள்ள போவதில்லை என்றார்கள் – இப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள் – இம்ரான் எம்.பி

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

editor

சீதுவையில 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் சிக்கியது – ஒருவர் கைது

editor