உள்நாடு

தனியார் தாங்கி உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பிற்கு IOC ஆதரவு

(UTV | கொழும்பு) –  தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள குறித்த தொழிற்சங்கம், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஐஒசி தாங்கி ஊர்தி சாரதிகளும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கத்தினருக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

வலுசக்தி அமைச்சில் இன்று முற்பகல் 11.30 அளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மனைவி மரணித்து மூன்றாவது நாளில் கணவனும் மரணம் – ஓட்டமாவடியில் சோகம்!

editor

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor

வெளிநாடு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்