உள்நாடு

தனிமைப்படுத்தல் மற்றும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், ஒருபகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டம் : ஊர்காவற்துறை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் பகுதியான தம்படி பிரதேசம்

மாத்தறை மாவட்டம் : மாத்தறை பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுககள்

களுத்துறை மாவட்டம் : தொடங்கொட பொலிஸ் அதிகாரப்பிரிவின் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காவல்துறை அதிகாப்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – 527 முறைப்பாடுகள் பதிவு!

editor

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சோக சம்பவம்

editor

ரஞ்சன் ராமநாயக்கவின் திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகள் பாராளுமன்றிற்கு