உள்நாடு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 646 கைது

(UTV | கொழும்பு) –   தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 646 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது 18 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 72,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கடதாசி தட்டுப்பாடு : பரீட்சைகள் ஒத்திவைப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு புதிய பதவி

editor

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்