கிசு கிசு

‘தந்தை நலமாக உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம்’

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகளை உருவாக்கி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்டாரில் உள்ள எரிபொருள் நிறுவனமொன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

குறித்த நிறுவனத்துடன் தமக்கோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள எவருக்கோ தொடர்பு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தினார்.

Related posts

21 வயதுடைய யுவதி மரணம் : PCR முடிவு இன்று

பிரதமர் பதவியில் போட்டியிட மஹிந்த முடிவு?

ராணி 2-ம் எலிசபெத்திற்கு 10-வது கொள்ளுப்பேரன்