உள்நாடு

தந்தை ஜனாதிபதியானால் மகனால் ஜனாதிபதியாக முடியுமா – நாமல்.

(UTV | கொழும்பு) –

தந்தை நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார் என்பதற்காக அவரது பிள்ளையால் ஜனாதிபதியாக முடியுமா?“ இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“தலைமைத்துவம் காலத்திற்கு காலம் மாறும். இது யதார்த்தம். தந்தையின் மகுடத்தை மனுக்கு கொடுக்க முடியாது. தந்தை ஜனாதிபதி என்பதால் மகனால் ஜனாதிபதியாக முடியாது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியே தீர்மானிக்கும். அது தொடர்பில் எதிர்காலத்தில் நடைபெறும் கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்படும்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தம்மிக்க பெரேரா விருப்பம் தெரிவித்துள்ளமையின் ஊடாக பொதுஜன பெரமுனவின் ஸ்திரத்தன்மையை அறிந்துக்கொள்ள முடியும்“ – என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனுர குமாரவுக்கு மதமில்லை: நான் கட்டிய நூலை தரையில் வீசினார்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான அறிவித்தல்