வகைப்படுத்தப்படாத

தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் கௌரவ விருந்தினர் உரை ஆற்றவுள்ளதோடு இலங்கையில் அதிகாரப்பகிர்வு எனும் தலைப்பில் சுகாதார, போஷாக்கு, சுதெசிய மருத்துவ அமைச்சர் வைத்தியகலாநிதி ராஜித சேனாரட்ன நினைவுப் பேருரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

සමාජ ආර්ථික අභියෝග ජය ගැනීමට නව ජවයකින් ඇරඹි Communique PR

அமைச்சரவையின் அறிக்கை

தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை 5 ஆவது நாளாகவும்