உள்நாடு

தந்தையும் மகனும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில்

(UTV | கொழும்பு) – ஊடகவியலாளர் ஒருவரை கடத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்த போலியான முறைப்பாடு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CCD) ஆஜராகியுள்ளார்.

குழுவொன்றினால் தாம் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறி ஊடகவியலாளர் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ள சுஜீவ கமகே எனப்படும் 62 வயதான ஒருவர், கடந்த 10 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலையிலுள்ள காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும், தாம் கடத்தப்படவில்லை எனவும், அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவையும், அவரது புதல்வரான சத்துர சேனாரத்னவையும் சந்தித்துள்ளதாகவும், பின்னர் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இது குறித்து, ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான சத்துர சேனாரத்ன ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தோட்ட தொழிலாளர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

துறைமுக நகர சட்டமூலத்தை எதிர்த்து ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை