உள்நாடுபிராந்தியம்

தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டது!

ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான 105 ½ மைல் கல் அருகே இன்று (05) காலை 10:00 மணியளவில் மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன் கொண்ட தண்டவாள ரயில் தடம் புரண்டதால், மலையக ரயில் சேவை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

உலபனையிலிருந்து கொட்டகலைக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் செல்லும் தண்டவாள ரயில் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

தண்டவாள ரயில் குழுவினர் குறித்த ரயில் இயந்திரத்தை சீர் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

தடம் புரண்ட தண்டவாள ரயில் இயந்திரம் சீர் செய்யும் வரை, பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும், கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில்கள் ரொசெல்லவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும் அட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

-க.கிஷாந்தன்

Related posts

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி எஸ்.எம்.நளீம் பதவிப்பிரமாணம்

editor

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

editor

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அமைச்சர் சரோஜா விஜயம் –

editor