உள்நாடு

தடைப்பட்ட ரயில் சேவை இன்று முதல் வழமைக்கு

உடுவர ரயில் கடவையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான ரயில் சேவை இன்று (2) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை – பதுளை வரையிலான ரயில்கள் இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பதுளை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி உடுவர பகுதியில் உள்ள ரயில் கடவையில் மண்மேடு சரிந்து விழுந்தது.

இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

Related posts

இம்மாதம் முதல் ஆசிரியர்களுக்கு ரூ.5,000 இடைக்கால கொடுப்பனவு

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது

editor

பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது.