அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 12) சீனாவின் பீஜிங் நகரை வந்தடைந்தார்.

பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் (Cao Shumin) வரவேற்றார்.

இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களான தடைசெய்யப்பட்ட நகரம் (அரண்மனை அருங்காட்சியகம்), ஏகாதிபத்தியக் கட்டிடக்கலை ஆகியன தேசிய அளவில் பாதுகாக்கப்பட்டு வரும் தொகுப்பாகும்.

அத்தோடு, சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானக் கலையின் மகிமையை எடுத்துக்காட்டும் சீனப் பெருஞ்சுவரும், சீனாவின் முக்கியமாகப் பாதுகாக்கப்படும் சின்னங்களாகத் திகழ்கின்றன.

எதிர்வரும் நாட்களில், பிரதமர் 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதுடன், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச சபைப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள இருக்கின்றார்.

Related posts

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

editor

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு

டயானாவுக்கு எதிரான வழக்கு நவம்பர் 4 இல் மீள விசாரணை

editor