தங்க பிஸ்கட்களுடன் விமானப்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் வியாழக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய மினுவாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய புலனாய்வு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரி விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான விமானப்படை புலனாய்வு அதிகாரியின் பையிலிருந்து 550 கிராம் எடையுடைய 24 கரட் தூய்மையான 40 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.