சூடான செய்திகள் 1

தங்க ஆபரணங்களுடன் மூன்று பேர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்க ஆபரண தொகையுடன் மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்க ஆபரண தொகையின் பெறுமதி சுமார் 40 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

 

Related posts

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்