உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் வீடொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருளும் இரு சடலங்களும் மீட்பு!

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பெக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவரும் உயிருழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு பரிசோதனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்தால் வைத்தியசாலைகளில் காணப்படும் அடிப்படை குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியாதுபோயுள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

ரிஷாதின் கைது சட்ட ஆட்சியையும் நீதி முறைமையையும் குழிதோண்டிப்புதைக்கும் செயல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு