தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து மூன்று பேர் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார மேற்கொண்டார்.
இந்த மரணங்கள் பியர் மற்றும் ஹெரோயின் அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (22) இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.