வணிகம்

தங்கம் பவுண் ஒரு இலட்சத்தினை கடக்கும் நிலை

(UTV | கொழும்பு) – கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்ட நிலையில் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92,000 ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது.

உலக சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70,000 ரூபா முதல் 75,000 ரூபா வரை காணப்பட்டது.

இதேவேளை, 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 120,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி அதிகரிப்பு

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு