உள்நாடு

ட்ரோன் கெமரா இயக்குவோர் குறித்த தரவுகளை சேகரிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ட்ரோன் கெமரா இயக்கக்கூடியவர்களை பதிவு செய்துகொள்ளுமாறு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற சூழலில் மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்காக ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது

மின்சார வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி – வரி வருமானம் அதிகரிப்பு

“காந்தாரா” : பாகிஸ்தானின் பௌத்த பாரம்பரியம் தொடர்பான ஆவணப்படம்