உலகம்

ட்ரம்புக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

(UTV|அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மீதான செனட் சபை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அதன் விதிமுறைகள் குறித்து ஜனநாயக கட்சியினருக்கும், குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதியின் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த குற்றச்சாட்டுக்களை டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இத்தாலியில் நாடுதழுவிய முடக்க செயற்பாடுகள் அமுல்

பாகிஸ்தானிலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

ஒமிக்ரோன் வீரியம் : இன்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு