அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பினால் குறைக்கப்பட்ட 20 % வரி குறைப்பை தாம் வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
73ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (01) ஹட்டனில் மலையக மக்கள் முன்னணியின் காரியாலத்தை திறந்து வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்னண் உட்பட மலையக மக்கள் முனன்ணியின் செயலாளர் நாயகம் விஜேயசந்திரன், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”இறக்குமதியை விட ஏற்றுமதி என்பது முக்கியமானது. ஏற்றுமதி செய்தால் மாத்திரமே டொலரினை நமது நாட்டுக்கு கொண்டுவர முடியும்.
வரிவீதம் அதிகரித்து காணப்பட்டபோது இங்கு உள்ள உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
நமது நாட்டில் ஆடை ஏற்றுமதி இரண்டாவது இடத்தில் இருப்பதோடு வருமானத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும். அதேபோல் அமெரிக்காவிலும் இன்று ஜீ.எஷ்.பி. பிலஷ் என்ற ஒரு வரி காணப்படுகிறது.
இதனையும் குறைப்பதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக அரசாஙகம் முற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை அரசு குறைப்பதற்கு மேற்கொள்ளும் போது பொருளதார உற்பத்தி வலுவடையும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தேசிய இளைஞர் சேவை மற்றங்கள் அமைப்பது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியினால் மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள இளைஞர்கள் பெரிதும் பாதிக்ப்பட்டுள்ளனர்.
ஒரு கிராமசேவகர் பிரிவிற்கு ஒரு இளைஞர் கழகம் அமைக்கும் போது ஏனைய தோட்டப்பகுதியில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்..
அதனால் விளையாட்டு கழகங்கள் உருவாக்க முடியாது. அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது.
கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க செய்ததைப்போல் ஒவ்வொரு தோட்டபகுதிகளுக்கும் இளைஞர் கழகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதிலும் அரசியல் கலக்கப்பட கூடாது. நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்க கூடும். 23% ஆக இருந்த வறுமை நிலை இன்று 53% ஆக அதிகரித்திருக்கிறது.
இந்த நிலை அதிகரிப்பதற்கு காரணம் பொருளாதார நெருக்கடியாகும். தற்போது அனைத்து கொடுப்பனவுகளும் சேர்த்து ரூ. 2038 தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது.
கடந்த காலங்களில் அறிவித்தப்படி ரூ. 1700சரி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என தெரிவித்தார்.