அரசியல்உள்நாடு

ட்ரம்பின் புதிய வரி – இந்தியப் பிரதமர் மோடியிடம் தீர்வைக் கோரிய அரசாங்கம் – அமைச்சர் அனில் ஜயந்த வெளியிட்ட தகவல்

நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஆடைத் துறையில் தங்கி இருப்பதால், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கையால் நாட்டின் ஆடைத் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தொடர்புடைய இறக்குமதி வரிக் கொள்கை பொருந்தும் என்று அமைச்சர் விளக்கினார்.

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை மற்றும் அதன் விளைவாக நாட்டைப் பாதித்த பிரச்சினைகள் குறித்து, இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசாங்கம் ஒரு தீர்வைக் கோரியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பஸ் கட்டணம் அதிகரிப்பு : புதிய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32

நாங்கள் நாட்டுக்காக உழைத்துள்ளோம் – நாமல்

editor

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட்