சூடான செய்திகள் 1வணிகம்

டொலருக்கு நிகராக ரூபா வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Related posts

க.பொ.த சாதாரணதர பரீட்சை மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை

வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றமை குறித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட உத்தியோகஸ்தர்

சட்டவிரோத மின்சார பாவனை தண்டப்பணங்கள் மூலம் 110 மில்லியன் ரூபா வருமானம்