வகைப்படுத்தப்படாத

டொனால்ட் ட்ரம்பின் தொண்டு அமைப்புக்கு எதிராக வழக்குபதிவு

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொண்டு அமைப்புக்கு எதிராக நிவ்யோர்க் சட்ட மா அதிபர் அலுவலகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

குறித்த அமைப்பும், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளும் கடுமையாகவும், திட்டமிட்டும் சட்டத்தை மீறி இருப்பதாக, சட்ட மா அதிபர் பார்பரா அண்டர்வுட் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக இந்த அமைப்பின் ஊடாக 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டவிரோத அரசியல் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சட்ட நடவடிக்கையின் ஊடாக, குறித்த அமைப்பை கலைக்குமாறும், 2.8 மில்லியன் டொலர்களை அபராதமாக விதிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இதுதொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இந்த வழக்கை தம்மால் தீர்க்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

යුරෝපානු සංගමයේ ප්‍රධානීත්වය වෙනුවෙන් ප්‍රථම වරට කාන්තාවක්

අර්ජුන් ඇලෝසියස් ඇතුලු 7කට අධිචෝදනා භාර දී ඇප මත මුදාහරි.

தேர்தல் காலப்பகுதியில் 1148 தேர்தல் முறைப்பாடுகள்