விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மற்றுமொரு சுழற்பந்துவீச்சாளர்

(UTVNEWS|COLOMBO) – ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான முகமது நபி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, முதன் முறையாக இந்தியாவை எதிர்கொண்டதன் பின்னர் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது.

தற்போது பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிற நிலையில், அந்த அணியின் சகலதுறை வீரர் முகமது நபி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனை ஆப்கானிஸ்தான் அணியின் மேலாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

Related posts

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான உத்தேச இலங்கை அணி அறிவிப்பு

தென்னாபிரிக்க அணியுடனான இருபதுக்கு – 20 இலங்கை குழாம் அறிவிப்பு

T20 பந்துவீச்சாளர் தரப்படுத்தல் பட்டியலில் வனிந்து ஹசரங்கவுக்கு முதலிடம்