உலகம்

டெல்லி வன்முறை – ஐ.நா மனித உரிமைகள் கவலை

(UTV|இந்தியா )- குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையரான மிஷேல் பெஷலட் கவலை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே இடம்பெற்ற மோதலால் தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

தலைநகரம் மறுபெயரிடப்பட்டது

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : பலியானோர் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரிப்பு.

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை