விளையாட்டு

டெல்லி கெப்பிரல்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|INDIA) இந்தியன் ப்றீமியர் லீக் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 39 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து, 155 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 116 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், டெல்லி கெப்பிரல்ஸ் அணி ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

Related posts

இந்திய லெஜண்ட்ஸின் அதிரடிக்கு சவாலாக இலங்கை லெஜண்ட்ஸ்

இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது பங்களாதேஷ்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் டி.ஸ் சேனானாயக் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு