உள்நாடு

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதி வரையில் 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இது 48 சதவீதமாகும் என்றும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்