வகைப்படுத்தப்படாத

டெங்கு நோயால் பாடசாலை சீருடையை மாற்ற தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை சிறுவர்களிடையே டெங்கு நோய் விரைவாக பரவிச் செல்வதன் காரணமாக, பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதுகுறித்தான சுற்றறிக்கை இன்னும் இரண்டு தினங்களில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டார்.

இதன்படி, கட்டை காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீள காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரமுடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சுகாதார அமைச்சின் புள்ளிவிரப்படி கடந்த 7 மாதங்களில் மாத்திரம் 77 ஆயிரத்து 222 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Meek Mill: US rapper gets new trial after 11 years

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து விசேட அமைச்சரவை கூட்டம் தற்போது