சூடான செய்திகள் 1

டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)  மழையுடனான காலநிலை காரணமாக 05 மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளதுடன் குறித்த இந்த மாவட்டங்களில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் , டெங்கு நுளம்பு அதிகம் பரவும் மாவட்டங்களுக்கு விசேட வைத்திய நிபுணர் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அதிக வெப்பம் – கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்