வகைப்படுத்தப்படாத

டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – புதிதாக மேற்கொள்ளப்பட்ட நுளம்புக் குடம்பிகள் ஆய்வுகளுக்கு அமைய டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடம்பிகள் ஆய்வு தொடர்பான சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகரித்துள்ளதை புதிய ஆய்வு நிரூபித்துள்ளது.

இதனால் டெங்கு நுளம்புக் குடம்பிகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு கம்பஹா குருநாகல் இரத்தினபுரி திருகோணமலை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் டெங்கு நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்

Devotees restricted from entering ‘Maha Maluwa’

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…