முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தன்னிடம் 30 கோடி ரூபா பணம் கோரியதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன் சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’ குற்றம் சாட்டியுள்ளார்.
பணத்தை செலுத்தாததால் தான் தங்காலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ரூ. 10 மில்லியன் மட்டுமே செலவிடப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.