உலகம்

டிரம்பின் முன்னாள் மனைவி இவானா காலமானார்

(UTV | வாஷிங்டன்) – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73) உயிரிழந்துள்ளார்.

இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அவர் சுயநினைவின்றி படிக்கட்டில் விழுந்து கிடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைக்க அவரை பொலிசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். மேலும், இவர் டொனால்ட் ஜூனியர், எரிக் டிரம்ப் மற்றும் இவாங்கா டிரம்பின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இவானா மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

நியூசிலாந்து – ஓக்லாந்து நகரம் மீண்டும் முடக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு அஞ்சாத வட கொரியா

இங்கிலாந்து ராணி உலகை விட்டும் பிரிந்தார்