டித்வா புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நாட்டில் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஏற்பட்ட அனர்த்தத்தினால் இதுவரை 5,325 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அதிகளவான வீடு சேதங்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 1,815 ஆகும்.
இரண்டாவது அதிகளவான வீடு சேதங்கள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 767 ஆகும்.
மேலும் குருநாகல் மாவட்டத்தில் 476 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 415 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 404 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 300 வீடுகளும் அனர்த்தத்தினால் முழுமையாக அழிவடைந்துள்ளன.
இதற்கிடையில் அனர்த்தத்தினால் பகுதியளவில் சேதமடைந்துள்ள வீடுகளில் அதிகளவான வீடுகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 13,422 ஆகும்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் கேகாலை மாவட்டத்தில் 11,601 வீடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 7,869 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 7,291 வீடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 5,830 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 4,809 வீடுகளும், வவுனியா மாவட்டத்தில் 4,135 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 3,742 வீடுகளும், குருநாகல் மாவட்டத்தில் 3,600 வீடுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 3,526 வீடுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 2,249 வீடுகளும் பதிவாகியுள்ளன.
ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட அதிகளவான குடும்பங்கள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 98,146 குடும்பங்களைச் சேர்ந்த 349,429 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அதிகளவான பாதிப்பு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அம்மாவட்டத்தில் 85,803 குடும்பங்களைச் சேர்ந்த 328,847 நபர்கள் அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் (இடம்பெயர்ந்துள்ளனர்).
கண்டி மாவட்டத்தில் 51,098 குடும்பங்களைச் சேர்ந்த 161,140 நபர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 25,999 குடும்பங்களைச் சேர்ந்த 86,376 நபர்களும், குருநாகல் மாவட்டத்தில் 25,055 குடும்பங்களைச் சேர்ந்த 85,891 நபர்களும், மன்னார் மாவட்டத்தில் 23,641 குடும்பங்களைச் சேர்ந்த 77,451 நபர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 22,918 குடும்பங்களைச் சேர்ந்த 67,340 நபர்களும், அனுராதபுரம் மாவட்டத்தில் 21,948 குடும்பங்களைச் சேர்ந்த 72,359 நபர்களும் இந்த அனர்த்த நிலைமையினால் அதிக பாதிப்புக்குள்ளானவர்களாக பதிவாகியுள்ளனர்.
