டித்வா சூறாவளியால் நாட்டில் 374,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக தொழிலாளர்கள் மாதத்துக்கு 48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பை சந்தித்துள்ளதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
