உள்நாடு

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட 70% குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 70 சதவீதமானோருக்கு ரூ. 50,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார இது குறித்துத் தெரிவிக்கையில், இதுவரை 115,757 பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இந்தப் பணம் சென்றடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறு வணிகங்கள் மற்றும் கைத்தொழில்களை மீள கட்டியெழுப்புவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அரசாங்கம் நட்டஈடு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 63 சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு ரூ. 12.6 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் இந்த நிதி விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தக் கொடுப்பனவுத் திட்டமானது சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த சிறு தொழில்முயற்சியாளர்களின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய ஒத்துழைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள்

ஐக்கிய இராச்சியத்தின் விசேட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்

editor

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு