உள்நாடு

டிஜிட்டல் ID இற்கு இந்தியாவின் உதவி

(UTV | கொழும்பு) – இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய நிதியுதவியைப் பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கைக்கு வரவுள்ளன.

அதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நாட்டிலுள்ள தனிநபர்களின் பயோமெட்ரிக் தரவுகளின் அடிப்படையில் தனிநபர்களின் அடையாளத்தைச் சரிபார்ப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.

டிஜிட்டல் அடையாள கட்டமைப்பின் கீழ், டிஜிட்டல் மற்றும் உடல் சூழல்களில் ஒருவரின் அடையாளத்தை சரிபார்க்கக்கூடிய அடையாளமும் அறிமுகப்படுத்தப்படும்.

2019 டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே நடந்த இருதரப்பு சந்திப்பில், டிஜிட்டல் அடையாள கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு மானியம் வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.

Related posts

பொது மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்

ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்