உள்நாடு

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதி….!

இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரை பார்வையிட ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக கலகொடஅத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச பல் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில்

அலி சாஹிர் மெளலானாவை SLMC யில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

editor

மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்