சூடான செய்திகள் 1

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு தீர்ப்பு எதிர்வரும் 8ம் திகதி

(UTV|COLOMBO)-சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் தீர்ப்பு, எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக ஹோமாகம மேல்நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன இன்று(30) உத்தரவிட்டுள்ளார்.

சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் கடந்த வருடம் ஜூன் மாதம் ஞானசார தேரருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் , ஞானசார தேரர் கடந்த வருடம் ஜூன் மாதம் குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார்.

 

 

 

 

Related posts

இரட்டை கொலை சம்பவம்- சந்தேக நபருக்கு மரண தண்டனை

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

அதிபர் போட்டி பரீட்சையில் கையடக்க தொலைபேசிகளுடன் மூவர்