உலகம்

ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் குணமடைந்தார்.

81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.

Related posts

இலங்கை நோக்கி வந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது!!!

எக்ஸ் தளத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம்!

ராக்கை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் இசைக்கு நடனமாடும் வீடியோக்களால் சுட்டுக்கொலை