சூடான செய்திகள் 1

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கின் ஆரம்ப ஆட்சேபனை மீதான உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 07ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சராக இருந்த முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன் காரணமாக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருப்பதாக கூறி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

 

 

Related posts

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட NTJ உறுப்பினர் ஒருவர் கைது

சப்ரகமுவ மாகாணத்தில் 130 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்