உள்நாடு

ஜெலக்னெட் குச்சிகளுடன் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) -வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலக்னெட் வெடி மருந்து குச்சிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தை நேரியகுளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் நேற்றிரவு 7 மணியளவில் வழிமறித்த இராணுவம், அவ்விடத்தில் சோதனைகளை மேற்கொண்ட போது பேருந்துக்குள்ளிருந்து ஜெலக்னெட் வெடி மருந்து குச்சிகள் மீட்டுள்ளது.

இதனையடுத்து அவற்றை மீட்ட இராணுவத்தினர் குறித்த வெடிமருந்து குச்சிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டில் தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Related posts

சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

editor

தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிக்கிறாரா?

editor

காணாமற் போனார் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை!