சூடான செய்திகள் 1

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளைய தினம் (26) ஜூம்ஆத் தொழுகையினை தவிர்த்து கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எச்.எம்.ஏ ஹலீம் கூறியுள்ளார்.

மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும், விஷேடமாக நகர் புறப் பகுதிகளிலும் ஜூம்ஆத் தொழுகையை தவிர்த்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நாட்டில் அசாதார சூழ்நிலைய ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

நவீன கையடக்க தொலைபேசி, உபகரணங்களுடன் மூவர் கைது

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை